நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்... பாய்ந்தது போலீஸ் நடவடிக்கை

நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்கள்... பாய்ந்தது போலீஸ் நடவடிக்கை
ஐதராபாத்தில் நடிகை நிதி அகர்வாலை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அநாகரிகமாக நடந்து கொண்ட விவகாரத்தில்,  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபாஸின் தி ராஜா சாப் படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி, ஐதராபாத்தில் உள்ள தனியார் மாலில் நடைபெற, அதில் படத்தின் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டார்.
அங்கு ஆரம்பம் முதலே பாதுகாப்புத் தடுப்புகளை மீறி, கூடிய ரசிகர்கள், நடிகை வெளியே செல்லும்போது, அவரை சூழ்ந்து கொண்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்தில் நிதி அகர்வால் சிக்கி திணறிய நிலையில், அதன் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளோ, திட்டமிடலோ இல்லாததே இதற்குக் காரணம் என்றும்,  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நிதி அகர்வால் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐதராபாத் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தனியார் மால் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது, குக்கட்பல்லி ஹவுசிங் போர்டு காவல் நிலைய காவலர்கள் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.