மேகமலை அருவிக்கு அனுமதி! மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்!
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
மேகமலை அருவியில் வெள்ளப் பெருக்கு சீரானதால் இரண்டு நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
தேனி மாவட்டம் கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் மேகமலை அருவி அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமான இந்த அருவியில் குளிப்பதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேகமலை அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
மேலும், அருவிப் பகுதிக்கு செல்லும் படிக்கட்டுகளிலும் தண்ணீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியதால் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாகியும் பிடிப்புப் பகுதிகளில் போதுமான மழை இல்லாததால் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீராகினது. இதனையடுத்து அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் ஆர்ப்பரித்து வரும் மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து மகிழ்ச்சியாக குளித்து வருகின்றனர்.
Admin Jan 23, 2026 0 6
Admin Sep 30, 2025 0 4
Admin Oct 1, 2025 0 4
Admin Oct 24, 2025 0 3
Admin Nov 4, 2025 0 3
Admin Oct 26, 2025 0 78
Admin Oct 24, 2025 0 116
Admin Oct 24, 2025 0 53
Admin Oct 24, 2025 0 77
Admin Jan 26, 2026 0 172
Admin Apr 4, 2026 0 22
VerSe Innovation Appoints Deloitte veteran P.R. Ramesh as Independent Director and...
Admin Dec 25, 2025 0 73
மகளிர் மற்றும் திருநங்கையர்கள் தொழில் துவங்கிட, ரூ.10 லட்சம் வரை பிணையில்லா வங்கிக்...