தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின்.. ஜெயக்குமார் விமர்சனம்
Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது , கட்சியின் உள்ளரங்க கூட்டம் என்பதால் உள்ளரங்கில் விவாதிக்கப்பட்டது குறித்து பொதுவெளியில் பேச முடியாது ..
திமுக என்கிற தமிழ்நாட்டை சீரழிக்கின்ற அராஜக ஆட்சியை மீண்டும் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்
செவிடன் காதில் சங்கு ஊதினால் கூட ஓரளவுக்காவது கேட்கும் , ஆனால் திமுக அரசுக்கு கேட்கவில்லை , செவிலியர்கள் ஆசிரியர்கள் அரசுத்துறை பணியாளர்களுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதியை கொடுத்துவிட்டு இந்த அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது , செவிலியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கிஞ்சித்தும் கவலை கொள்ளவில்லை
கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்த விவகாரத்தில் கூட கள்ளக்குறிச்சி செல்லாத முதலமைச்சர் தேர்தல் நெருங்கும் காரணத்தால் கள்ளக்குறிச்சி செல்கிறார் , தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் .
தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக வரும் வடமாநில தொழிலாளருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலாக திருத்தணி விவகாரம் அமைந்தது , வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் தலைகுனிவு சம்பவமாக இது அமைந்துள்ளது .
தமிழகத்தில் போதை பழக்கவழக்கம் தலை விரித்து ஆடுகிறது , கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது , கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை போதை பொருட்கள் புழக்கம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சரே பொய் பேசி வருகிறார் .
தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு பூஜ்ஜியமாக குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய் என விமர்சனம் செய்தார் .
Admin Jan 23, 2026 0 6
Admin Sep 30, 2025 0 4
Admin Oct 1, 2025 0 4
Admin Oct 24, 2025 0 3
Admin Jan 16, 2026 0 3
Admin Oct 26, 2025 0 78
Admin Oct 24, 2025 0 116
Admin Oct 24, 2025 0 53
Admin Oct 24, 2025 0 77