BREAKING: தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்

BREAKING: தவெகவில் இணைந்தார் செங்கோட்டையன்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தவெகவில் இன்று இணைந்தார்.

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் வைத்து விஜய் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார். இந்நிகழ்வில் தவெக மூத்த தலைவர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு துணைத் தலைவர் பதவி அல்லது அமைப்பு பொதுச் செயலாளர் பதவிகளில் ஏதேனும் ஒரு பதவி வழங்கப்படலாம் என்றும், விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை விஜய் வெளியிடக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பெயர்கள் புறக்கணிக்கப்படுவதாக செங்கோட்டையன் குற்றம்சாட்டியதால், இபிஎஸ்சுடன் செங்கோட்டையனுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் திமுக, தவெக, பாஜக ஆகிய கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சியில் இணையக்கூடும் எனத் தகவல் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.