கணவரை கொன்று கிரைண்டரில் அரைத்தது ஏன்? மனைவி பரபரப்பு வாக்குமூலம்

கணவரை கொன்று கிரைண்டரில் அரைத்தது ஏன்? மனைவி பரபரப்பு வாக்குமூலம்

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பலில் செருப்பு வியாபாரி ராகுல் குமாரை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து உடல் பாகங்களை கிரைண்டரில் அரைத்து வீசிய மனைவி ரூபி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாட்டையே உலுக்கிய இக்கொலை சம்பவம் குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

வீட்டுக்குள் காதலர் கவுரவ் குமாருடன் தனிமையில் உல்லாசமாக நான் இருந்தேன். இதை எனது கணவர் ராகுல் குமார் திடீரென பார்த்து விட்டார். என்னை வீட்டை விட்டு துரத்தப் போவதாக கணவர் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நான், கள்ளக் காதலன் கவுரவ் குமாரிடம் அவரை கொலை செய்யும்படி கூறினேன். இதன்படி 2 பேரும் கொலை திட்டம் தீட்டினோம். 

கணவரின் தலையில் இரும்பு கம்பியால் கவுரவ் குமார் தாக்கி மண்டையை உடைத்தார். இதைத் தொடர்ந்து, நான் சுத்தியலால் தாக்கினேன். இதில் நிலை குலைந்து கீழே விழுந்த ராகுல் குமாரை 2 பேரும் சேர்ந்து கத்தியால் சரமாரியாக குத்தினோம். பின்னர் அரிவாளை எடுத்து வந்து உடலை துண்டு துண்டாக வெட்டினோம்.

அதன்பிறகு, தலையை வெட்டி எடுத்தோம். கால்களையும் துண்டித்தோம். பின்னர் புதிதாக வாங்கி வந்த கிரைண்டரில் உடல் பாகங்களை போட்டு மாவு போல அரைத்தோம். பிறகு அதை பாலித்தீன் கவர்களில் அடைத்து வெளியே எடுத்து சென்று, வேறு வேறு இடங்களில் வீசி விட்டோம்.

நாங்கள் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, கணவரை காணவில்லை என போலீசிடம் நான் பொய் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி, அனைத்தையும் கண்டுபிடித்து என்னையும் கவுரவையும் கைது செய்து விட்டனர்.

இவ்வாறு ரூபி வாக்குமூலம் அளித்துள்ளார்.