ராதாபுரம் அருகே எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கோலப் போட்டியை அதிமுக முன்னாள் எம்பி சௌந்தரராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 109வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி ராதாபுரம் அருகே பரமேஸ்வரபுரத்தில் கோலப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை முன்னாள் எம்பி சௌந்தரராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற கோல போட்டியில், பல்வேறு பெண்கள் ஆர்வத்தோடு காலையிலேயே வண்ணக் கோலங்களை இட்டனர். மக்களால் நான் மக்களுக்காகவே நான் என்ற வாசகத்தோடு அடங்கிய கோலங்கள், பல்வேறு வண்ண கோலங்களை இட்டு பார்வையாளர்களை கவர்ந்தனர்.
சிறப்பு விருந்தினராக கழக அமைப்புச் செயலாளர் ஏ.கே.சீனிவாசன் கலந்து கொண்டார். ராதாபுரம் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கேபி.கே.செல்வராஜ்,
மேற்கு ஒன்றிய செயலாளர் அந்தோணி அமலராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் வசந்தி, பரமேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா மின்னல் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
நிகழ்ச்சியில் அதிமுக கிளைக் கழகச் செயலாளர் மின்னல், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி ஒன்றிய செயலாளர் விநாயகம்,மாணவரணி ஒன்றிய செயலாளர் குமார், சிறுபான்மை பிரிவு ஒன்றிய செயலாளர் அந்தோணி பிச்சை,, ஒன்றிய பொருளாளர் துரை சாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஆவுடை. மணிகண்டன், நிர்வாகிகள் ஜெயபால்,ராம், முருகதாஸ்,செல்வராஜேஷ், வினிஸ்டர், சூசை வியாகுழம், சுப்புராமன், செல்வன், லிங்கதுரை, சந்திரன், சரவணன், அம்பரூஸ், அருணாசலம், முருகன், கதிரேசன், குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.