இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சனகா நியமனம்
இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக தசுன் சனகா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக சரித் அஸலன்கா இருந்தார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக சனகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. டி20 உலகக் கோப்பை வரையிலும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு சனகா கேப்டனாக இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், டி20 உலக கோப்பைக்கான 25 வீரர்களை கொண்ட உத்தேச அணியையும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து அறிவித்துள்ளது.